ஹீரோ யார் வில்லன் யார் என்று தெரியாத ‘தரைப்படை’ திரைப்படம்!
ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும் .அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன.படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ , இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும்.
ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன . ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது.
அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான்
'தரைப்படை' .
இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கு...









