வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

MOVIES

விடுதலை இரண்டாம் பாகத்திற்கு ரெடியான சூரி !

விடுதலை இரண்டாம் பாகத்திற்கு ரெடியான சூரி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'விடுதலை -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்....
விறுவிறுப்பாக தயாராகும் ‘லால் சலாம்’திரைப்படம்!

விறுவிறுப்பாக தயாராகும் ‘லால் சலாம்’திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர...
மகனின் புதுப்பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பிரேமலதா விஜயகாந்த்!

மகனின் புதுப்பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பிரேமலதா விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !! Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும...
அஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற சக்கரவியூகம் – 3/5

அஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற சக்கரவியூகம் – 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூகம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூகம்". கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி ஸ்ரீ(ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்)...
வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா!

வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா! மறக்குமா நெஞ்சம் திரைப்படம் பள்ளி கால நினைவுகளை ஏற்படுத்தி, மனதை வருடும் கதைக்களம் கொண்டு படமாக்கப்பட்டு இருக்கிறது. இரா. கோ. யோகேந்திரன் இயக்கியிருக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தில் ரக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கோபி துரைசாமி, இசை சச்சின் வாரியர், படத்தொகுப்பு சஷாந்த் மளி, கலை பிரேம் கருத்தமலை, பாடல்களை தாமரை எழுதியிருக்கிறார். இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யேகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தி...
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர்

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மகத்தான கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்...
நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது – தோனி வெளியிட்ட LGM ரகசியம்

நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது – தோனி வெளியிட்ட LGM ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். LGM திரைப்படம் காமெடிக் காட...
ஷாருக்கானின் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது

ஷாருக்கானின் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ப்ரிவ்யூ காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது. பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர்ப்பதுடன் ஜவான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. ப்ரிவ்யூ கிங் கானின் குரலில் தொடங்குகிறது, அடுத்து என்ன எனும் ஆர்வத்தை உருவாக்குகிறது. ரசிகர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் இதுவரை பார்த்திராத அவதாரங்களில் SRK-ன் பல்வேறு தோற்றங...
இலங்கை இனப்படுகொலையை அம்பலப்படுத்தும்  “பேர்ல் இன் தி பிளட்’

இலங்கை இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் “பேர்ல் இன் தி பிளட்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதிபதியும், நீதியும் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு! - ‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) இயக்குநர் கென் கந்தையா ஆதங்கம்! இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், ஈழத்தில் நடந்த இன அழிப்பின் பின்னணியை கதைக்களமாக கொண்டு, உலகளவில் நடக்கும் இன அழிப்பு சம்பவங்களை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இயக்குநர் கென் கந்தையா இயக்கியிருக்கும் படம் தான் ‘பேர்ல் இ...