ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்ஷ்மி’பட தயாரிப்பாளர்..!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்ஷ்மி’ படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த பரிசால் நடிகர் பிரபு தேவா பிரமிப்பாகி இருக்கிறார்.
ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் பிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி கூறும்போது, ‘உணர்வுகளும், பிரியாவிடையும் லக்ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெ...









