ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி
விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..!
நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது:
நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்லாதீங...









