எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது.
இந்த படத்தின் இறுதியில், ‘விரைவில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ என்று எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2-வது பாகம் பற்றி டைட்டில் போட்டு இருந்தார். இந்த படத்தை கிழக்கு ஆப்ரிக்காவின் பின்னணியில் பிரமாண்டமாக தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் தீவிர அரசியலில் இறங்கியதால், அந்த படம் தயாராகவில்லை.
எம்.ஜி.ஆரின் அந்த கனவை நிறைவேற்றும் வகையில், ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரின் அனிமேஷன் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரிகணேஷ், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா ஆகியோர் தயாரிக்கிறார்கள். அருள் மூர்த்தி இயக்குகிறார்.
இந்த படத்தின் தொடக்கவிழா எம்.ஜி.ஆரின் 101-வத...









