புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா! “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு! இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்!

எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்! தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கத்தில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் எப்படி தமிழ் சினிமாவில் பேசப்பட்டதோ அதுபோல், அவருடைய உதவியாளராக பணியாற்றிய எஸ்.டி.புவி, புதிய படத்தை இயக்கி வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அனைவரையும் கவர இருக்கிறார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்த எஸ்.டி.புவி, விஜயன் என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஜயன் படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட...
ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ 

ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து  ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வர...
பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்த சமந்தா!

பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்த சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்த சமந்தா! ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் வந்த ரம்யாகிருஷ்ணனின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர். பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 தொடரில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது....
விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்!

விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்! தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ள பகத் பாசில், மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது, நடிகர் பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகத் பாசில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது: “படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய்தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். விபத்து காரணமாக மூக்கில் மூன...
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என நடிகர் விஜய்க்கு, வன்னி அ...
இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்....
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா!

கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா! கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தான் தற்போது, தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இப்படத்தை நார்தன் தான் இயக்கினார். பின்னர் அவர் விலகியதால் ஓபிலி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார். சிம்பு படம் கைநழுவி போனதால், இயக்குனர் நார்தன், அடுத்ததாக கேஜிஎப் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தமன்னா ஏற்கனவே கே.ஜி.எப் ப...
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜூலை மாதம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதனை தெரிவித்தார்....