வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ 

ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசாகும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து  ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த படம் ரிலீசாகும் சமயத்தில் மற்ற படங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு சுமார் 600 திரையரங்குகளில் இப்படத்தை போட்டியின்றி திரையிட முடிவு செய்துள்ளனர்.
123 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன