வெற்றியின் ஜீவி ஷூட்டிங் முடிந்தது..!
சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது. ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது.
"ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்" என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது, "எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே. அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது. ...









