MOVIES
திடீர் அழைப்பு… பூமரங் குழுவை பாராட்டிய ரஜினி… நெகிழ்ந்த இயக்குனர் கண்ணன்..!
பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்ஸலண்ட் சொன்ன ரஜினி - கண்ணன் நெகிழ்ச்சி
நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.
இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது.
உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார்.
"ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன். படத்தில் நதி நீர் இணைப்புக்காக நாங்கள் செய்த ஆய்வைச்சொல்லி இது எப்படி சாத்தியப்படும் என்பதையும் எடுத்துச் சொன்னே...
பூமரங் படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினி..!
அதர்வா நடிப்பில் கண்ணன் இயக்கியுள்ள படம் பூமரங்.
இந்த படம் நதி நீர் இணைப்பு குறித்து பேசுகிறது. நாளை 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நதி நீர் இணைப்பு குறித்து ஏற்கனவே பல முறை பேசி இருக்கிறார்.
நிதி உதவி அளிக்கவும் தயார் என அறிவித்தார்.
இந்த நிலையில் நதி நீர் இணைப்பு குறித்து பேசும் பூமரங் படக்குழுவை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்....
ஹீரோயின் அட்டகாசம் மனம் திறந்த நெடுநெல்வாடை தயாரிப்பாளர்..!
நெடுநல்வாடை படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார்‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன்.
உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்ஷன்ஸின்‘நெடுநல்வாடை. சுமார் 2ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார்.
நேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட ட்ரெயிலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலை...
குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ்-சினேகா படம்!
தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !!
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது 34 வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர்.
எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.
நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.
அனேகன் , மாரி...
மஹா சிவராத்திரி கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ
கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் ரோகு :
மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , அலியா பாட் ,அயன் முகர்ஜி, ஆகியோர் வானத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம்பிராமாஸ்டரா படத்தின் லோகோவை வெளியிட்டனர்.
கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம் ,ப்ரயாக்ராஜ் . இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப்பட்டது.
இந்த லோகோவை வெளியிட கும்பமேளாவை விட சிறந்த இடம் வேறு எதுவும் படக்குழுவினருக்கு கிடைத்திருக்க முடியாது.
இந்த நிகழ்வினை பற்றி படக்குழுவினர் கூறியவை :
கரண் ஜோகர் கூறியவை: "கும்பமேளா கலாச்சார வரலாற்றின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும் .இந்நாளில் லோகோவை வெளியிட்டது மிகவும் சிறப்பு .
விஜய் சிங் , (CEO , ...
2020 பொங்கல் ரிலீஸ் ரேசில் விஜய்63…!?
நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ₹70 கோடிக்கு வாங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், அதாவது விஜய் 63 திரைப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே.
தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் கோரிக்கைக்கு இன்னும் உறுதி அ...
தும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த "தும்பா" விளம்பர வீடியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு லட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை நெருங்குவதை ஒட்டி, குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றிருக்கிறார்.
ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் இது பற்றி கூறும்போது, "நாங்கள் இந்த படத்தை ஆரம்பித்தபோது, எங்கள் இயக்குனரின் திரைக்கதை மற்றும் அவரது நோக்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தோம். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும் என நம்பினோம். படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த கோட்டபாடி ஜ...
உலகம் முழுதும் 1000 தியேட்டர்களில் 8ம் தேதி பொட்டு ரிலீஸ்..!
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான்.
பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.
மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வே...


