புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ! இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பரோட்டா சூரியாக வலம் வந்தவர் நடிகர் சூரி. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. பின்னர் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி படத்திற்கு 'விடுதலை' என்று பெயரிடப்பட்டு சில புகைப்படங்களும் வெளியாகியது. இதனை தொடர்ந்து டான், விருமன், எதற்கும் துணிந்தவன், போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி. தற்போது இயக்குனர் அமீர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற பல வெற்றி படங்களை...
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்....
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது எப்.ஐ.ஆர், சேஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா வில்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ரைசா வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு 2-வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இரு...
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு! புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என புஷ...
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன்ப...
மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்

மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில்  இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அதிகரிப்பின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது.  இதற்கு முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் ஆகிய  படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது அதே போல சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த அன்பறிவு படமும் சில மணி நேரங்களுக்கு முன் ஓடிடியில்த...
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்!

மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்... வைரலாகும் புகைப்படம்! கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!

இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா! வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி படத்தில் ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார். இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிந்துமதி, முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தி.நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். வருகிற பிப்ரவரி ...
அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு!

அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு! தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன்,விருமன் படங்களின்  படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார். சர்தார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கார்த்தி தொடங்கியுள்ளார் என்ற தகவலை இயக்குனர் பி.எஸ். மித்ரன் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்....
சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது “சேத்துமான்”

சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது “சேத்துமான்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது “சேத்துமான்” இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சேத்துமான்’ திரைப்படம் 19 வது சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது விருதை பெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அந்த வெற்றியை தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் ’சேத்துமான்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள “சேத்துமான்” திரைப்படம் படப்பிடிப்...