செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10
Shadow

MOVIES

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி! ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். அந்த படத்தில் சூரி தான் ஹீரோ. வெற்றிமாறன், சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார் வெற்றிமாறன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார். பாரதிராஜா விலகிய பிறகு கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிப்பதாக இருந்த முதிய...
விக்ரம் கோப்ரா திரைப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகிறது!

விக்ரம் கோப்ரா திரைப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. இசைப்புயல் AR ரஹ்மானின் முதல...
அட்வான்ஸ் தொகை 50 லட்ச ரூபாயையும் திருப்பி கொடுத்து மறைந்த தயாரிப்பாளருக்கு உதவும் விஷால்!

அட்வான்ஸ் தொகை 50 லட்ச ரூபாயையும் திருப்பி கொடுத்து மறைந்த தயாரிப்பாளருக்கு உதவும் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அட்வான்ஸ் தொகை 50 லட்ச ரூபாயையும் திருப்பி கொடுத்து மறைந்த தயாரிப்பாளருக்கு உதவும் விஷால்! தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த 'சின்னத்தம்பி' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது. அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பி மறைந்த தயாரிப்பாளர் பாலு தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்த படத்தின் பூஜை ஸ்டில்லைக் காட்டி உறுதி ஒன்றை அளித்துள்ளார். மார்ச் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடித்து அந்தப் படம் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும் மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் மேலும், தயாரிப்பாளர் பாலு, விஷாலுக்கு அட்வான்ஸ...
இன்று முதல் தொடங்கிய தனுஷ் – செல்வராகவன்-கலைப்புலி தாணு படம்

இன்று முதல் தொடங்கிய தனுஷ் – செல்வராகவன்-கலைப்புலி தாணு படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது. அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த செல்வராகவன் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார். இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி பரவியது. செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோவதால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு இடையில், ரொம்ப வருடங்களாக தனுஷ் – செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா Combination -ஐ எதிர்பார்த்து கொண்டிருக்க, தற்போது செல்வராகவன் தனது Twitter பக்கத்தில், ” தாணு சார், யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என்ற...
20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா-ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் பாண்டிராஜ் படம்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா-ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் பாண்டிராஜ் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் சூர்யாவின் அடுத்தப் படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடிக்கிறார் நடிகர் ராஜ்கிரண். நடிகர் சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது வரை ஓடிடி-யில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற தமிழ் படம் என இதனை சொல்லலாம். இதையடுத்து கெளதம் மேனன் இயக்கும் 'நவரசா' எனும் ஆந்தாலஜி படத்தில் நடித்த சூர்யா, தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 'சூர்யா 40' எனும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான 'நந்த...
அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் நடிக்கும் சமந்தா!

அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் நடிக்கும் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் சமந்தா நடிக்கும் விஷயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரித்திர, புராண கதைகளை புத்தகத்தில் படிப்பதை விட, திரைப்படமாக பார்ப்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்த வகைப் படங்கள் கவனம் பெற்ற நிலையில் பாகுபலி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்குப் பிறகு இந்த வகை பீரியட் ஃபிலிம்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சகுந்தலையின் கதை திரைப்படமாக தயாராகிறது. இந்தப் படத்திற்கு 'சகுந்தலம்' என்று பெயரிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர் சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். குறிப்பாக கம்பீரமான கதாபாத்திரங்களுக...
தமிழக முதல்வருக்கு நடிகர் சிம்பு நன்றி!

தமிழக முதல்வருக்கு நடிகர் சிம்பு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.   மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். நடிகர் சிம்பு இன்று அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில், எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி என்று பதிவு செ...
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. இதே நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது....
தியேட்டர்களில் 100 சதவீத சீட் நிரப்ப அரசு அனுமதிக்க வேண்டும் “ஈஸ்வரன்” சிம்பு அறிக்கை

தியேட்டர்களில் 100 சதவீத சீட் நிரப்ப அரசு அனுமதிக்க வேண்டும் “ஈஸ்வரன்” சிம்பு அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்ன...