திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

ஆதித்யவர்மா வெற்றிக்கு முழு காரணமும் அப்பா விக்ரம் தான் – துருவ் விக்ரம்

ஆதித்யவர்மா வெற்றிக்கு முழு காரணமும் அப்பா விக்ரம் தான் – துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது.  இப்படம்  வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் ஆதித்யவர்மா படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசியதாவது, "என்னை விக்ரம் சார் தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்...
முத்தக்காட்சிகள் படத்துக்கு அவசியமா..? – ஆர்.கே.சுரேஷ்  அதிரடி

முத்தக்காட்சிகள் படத்துக்கு அவசியமா..? – ஆர்.கே.சுரேஷ் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை - ஆர்.கே.சுரேஷ்   தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். விழாவில் அலெக்ஸ் பேசிம்போது, ‘ இந்தப்படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெர...
சிபிராஜூடன் கபடதாரி ஜோடி ஆன நந்திதா..!

சிபிராஜூடன் கபடதாரி ஜோடி ஆன நந்திதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'கபடதாரி' படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் 'கபடதாரி'யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார். இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் :- கதைய...
ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் - அறிமுக இயக்குனர் அதிரடி ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில்,கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே”. இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் நடிகர் சந்தானபாரதியின் மகன். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையையும், அதனை தொடர்ந்த நடக்கும் அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் ...
வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு. மணிரத்னம் வழங்கும் மெட்ராஸ் டாக்கீஸ் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். புது கவிஞர் சிவா அனந்த் எழுதிய வரிகள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது. மெலோடி பாடலான ‘கண்ணு தங்கம் ராசாத்தி.. உன்ன கண்டாலே நெஞ்சு மூச்சூடும் தீவாளி.. சொன்னா வம்பு மகராசி ஒம் பேரு சொல்லாட்டி.. மழை ஊருக்கு பெய்யாது டீ.. தனியில நடக்கையில்.. எனக்கு நீ துணையிரு.. மடியில... மனசுல... உறங்கிட... யெடங்கொடு...’ இந்த பாடல் வரிகள் ஹிட்டாகி உள்ளது. இந்த புது காம்பினேஷனான சித்ஸ்ரீராம் - சிவா அனந்த் கூட்டணியின் மற்ற பாடல்களு...
சந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

சந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானம் - இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டபடவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது என்று மட்டும் சொன்னார் இயக்குநர் ஆர்.கண்ணன். முழுக்க முழுக்க நகைச்சுவையில் மீண்டும் கலக்கியிருக்கிறார் சந்தானம். நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என முழு மசாலாவாக படம் தயாராகி வருகிறது. குடும்பங்கள் ரசிக்கும் வகையில் அமைந்த இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடிக்க, ஆனந்த்...
கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளப் படம் " கருத்துக்களை பதிவு செய் *இப்படத்தின் முதல் விளம்பர பதாகையை ( First Look Poster ) பாராளுமன்ற உறுப்பினர் " எழுச்சித் தலைவர்  தொல் திருமாவளவன்  வெளியிட்டார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக் குழுவைச் சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தோழர் தொல் திருமாவளவன் அவர்கள், இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்....
விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம் இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் , பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் .அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய  JSK சதீஷ் குமார், தேணாண்டாள் முரளி ,  H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்...
மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடிப்பில் 'ஆக்ஷன்' படம் வெளியாகும் அன்றே அவர் நடிக்கும் அடுத்தப் படமான 'சக்ரா' படத்தின் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது. விஷால் ஃபிலிம் ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநராக அறிமுகமாகும் எம் எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறியதாவது :- குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லரை தேசபக்தியோடு உருவாகும் படம் தான் 'சக்ரா'. தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இருக்கும். அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒரு இயக்குநராக 'சக்ரா' படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு...