“உசுரே” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு!
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில்
தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு.. எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு.. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி..
ஹெவன் பி...









