
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம் 3/5
விஷ்ணு விஷால் தயாரிப்பில் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் தான் ஓஹோ எந்தன் பேபி. விஷ்ணு விஷாலும் நடிகராகவே நடிச்சி இருக்கார். வழக்கமான வயசுக்கு மீறுன காதல் கதை தான். ஆனா சொன்ன விதம் கொஞ்சம் புதுசு.
அப்படி என்ன புதுசுன்னு யோசிக்கிறீங்களா…
கதைப்படி ஹீரோவுக்கு படிப்பைவிட சினிமாமேல தான் லவ்… ஸ்கூல் படிக்கும் போதே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னைவிட வயதில் பெரிய பெண்ணைப்பார்த்து ஜொள் விடுகிறார். அந்த பெண்ணும் பார்த்த ஒரே நாளில் மொட்டைமாடிக்கு வரவழைத்து ஹீரோவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ஹீரோவை பித்து பிடிக்க வைக்கிறார்… வீட்டில் தெரிந்ததும் ஹீரோவை வயதை காட்டி கழற்றி விடுகிறார்… முதல் காதல் பணாலாகிறது ஹீரோவுக்கு…
கல்லூரி முடித்து நண்பன் திருமணத்திற்கு வந்த இன்னொரு பெண் மிதிலாவைப் பார்க்கிறார்… அவரும் ஹீரோவை விட வயது மூத்தவர். அவரும் ஒரு சில சந்திப்பில் ஹீரோவுடன் லிப்லாக் முத்தம் கொடுத்து கதையை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் சின்ன சண்டை காரணமாக இருவரும் பிரிகிறார்கள்.
இதற்கிடையில் சினிமா வாய்ப்பு தேடிய ஹீரோவுக்கு விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்கிறார். 2 கதை சொல்லியும் விஷ்ணு அதை நிராகரிக்கிறார்.
கடைசியில் தன் லவ் ஸ்டோரியை கதையாக சொல்கிறார். அதை கேட்டதும் விஷ்ணு ஓகே சொல்கிறார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனதால் அதை படமாக்க முடியாது என்று ருத்ரா மறுப்பதால் எப்படியாவது ருத்ராவை மீண்டும் காதலியை சந்தித்து கதையை ஓகே வாங்கிவரச் சொல்கிறார் விஷ்ணு.

தான் இயக்குனர் ஆவதற்காக காதலியை ருத்ரா சந்தித்தாரா? அந்த காதல் கதையை படமாக எடுத்தார்களா? என்பதை மிக ஜாலியாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிற ருத்ரா பக்கத்து வீட்டு பையன் போல துறுதுறுவென இருக்கிறார். பள்ளிப்பருவ லவ், வாலிப லவ்விலும் பசங்களை ஏங்க வைக்கிறார். குறிப்பாக அந்த லிப்லாக் காட்சிகளில் ஜிவ்வென எகிற வைக்கிறார். ஆமா அதெப்படி இயக்குனரே பாத்த ஒரே நாளில் பொண்ணுங்களே லிப்லாக் பன்ற அளவுக்கா போவாங்க… அப்படியெல்லாமா ஏரியாவுல இருக்காங்க… அதுவும் அந்த பள்ளிப்பருவ காதலி ரோல்ல நடிச்ச அஞ்சுகுரியன் யூனிபார்ஃம் சட்டை பட்டுன கழட்டி விட்டுட்டு கிளாமர் காட்றதெல்லாம் ரொம்ப டூ மச். வழக்கமா பல படங்கள் நடிச்ச பிறகுதான் ரொமான்ஸ் காட்சிகள் லிப்லாக் காட்சிகள் எல்லாம் ஹீரோக்களுக்கு அமையும் ஆனா ருத்ரா குடுத்து வைத்தவர் முதல் பட்த்துலயே பல முறை பல பெண்களுக்கு லிப்லாக் கொடுத்து மனுஷன் வாழ்ந்திருக்கார்.
விஷ்ணுவிஷால் ஹீரோவாகவே வருகிறார். தம்பிக்காக படத்தையும் தயாரித்து நடித்தும் கொடுத்து தம்பிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்குனராகவே வருகிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை.
கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம்,கஸ்தூரி ஆகியோர் அவரவர் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஹரீஷ்கண்ணன் ஒளிப்பதிவில் எல்லா காட்சிகளும் 2கே கிட்சை கவர்வது போல கலர்புல்லாக இருக்கிறது.
ஜென்மார்ட்டினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில் ஓஹோ எந்தன் பேபியை ஜாலியாக ரசிக்கலாம்.
கோடங்கி 3/5
