‘பெருசு’ டிரெய்லர் வெளியீட்டு விழா!
*‘பெருசு’ டிரெய்லர் வெளியீட்டு விழா!*
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், "'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் 'பெருசு'. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை 'பெருசு' ...









