பேயே இல்லாத ஹாரர் படம்… சுந்தர் C நடிக்கும் ‘இருட்டு’
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிராத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும்.
சுந்தர் C இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான “ அரண்மனையின் ” இரண்டு பாகங்களையும் சுந்தர் C இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். முகவரி , நேபாளி , தொட்டி ஜெயா , 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய VZ துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியது , ஆம் , இது புதுமையான ஹாரர் படம் தான். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்றார்.
படத்தின் 8...









