செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

தமிழக அரசியல்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை!

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை! பிரதமர் நரேந்திர மோடியின் 71- வது பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜ.க. தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் ‘75 அங்குல அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டி.வி.’ நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் தொடுதிரை டிஜிட்டல் டி.வி.யின் செயல்பாட்டை கே.அண்ணாமலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டிஜிட்டல் டி.வி. மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (பன்கி பாத்) கலந்துரையாடலை கேட்டு அவரிடம் பேசவும் முடியும். சமூக நீதியை பிரதமர் நரேந்திர மோடி நிலைநா...
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு! பெரியார் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார். அரசு அலுவலகங்களில் இதை செயல்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சமூக நீதி நாள் உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் வாசிக்க அதை அங்கிருந்த அனைவர...
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து  உரிய உத்தரவுகளை  பிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அற...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை! கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது....
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு! பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு வருகிற 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த 2 மேல்சபை எம்.பி. இடங்களையும் தி.மு.க. எளிதாக பெறும் என்பது ஏற்கனவே உறுதியானது. இந்த நிலையில் அந்த 2 இடங்களுக்கும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- * 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. * கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும். * நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். * அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்....
12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை திட்டம் 12,959 கோவில்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- த...
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாகவே பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. இடையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது. 2-வது அலை கொரோனா தாக்கத்துக்கு பிறகு படிப்படியாக தொற்று குறையத் தொடங்கி உள்ளது. பல மாவட்டங்களில் தொற்று மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்று தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து குறை...
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை அண்ணா சாலையில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சென்னை அண்ணா சாலையில்  ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறினார். தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்....