செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

தமிழக அரசியல்

சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாய் பகுதி, சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில்  இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்....
10.5% உள் ஒதுக்கீடு ரத்தானது ஏன்?! வன்னியர்களை ஏமாற்றி  அசிங்கப்பட்ட PMK & ADMK தேர்தல் நாடகம்

10.5% உள் ஒதுக்கீடு ரத்தானது ஏன்?! வன்னியர்களை ஏமாற்றி அசிங்கப்பட்ட PMK & ADMK தேர்தல் நாடகம்

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
10.5% உள் ஒதுக்கீடு ரத்தானது ஏன்?! வன்னியர்களை ஏமாற்றி அசிங்கப்பட்ட PMK & ADMK தேர்தல் நாடகம்   https://youtu.be/8MK4KR5cTkI
இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
இது பதவி அல்ல பொறுப்பு - தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை! தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உ...
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்! இந்தியாவில் முதல்- அமைச்சர்களின் செல்வாக்கு குறித்து ‘சி.என். ஒ.எஸ். ஒபினியோம்” என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் சிறந்த முதல்- அமைச்சர்களாக 5 முதல்-அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்திய அமைப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்   நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்- அமைச்சராக திகழ்கிறார். இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 ஆகும். அவருடைய மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 12 ...
புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ‌ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியின் ‌ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எவ்...
மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி!

மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி! தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர். இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதே தினத்தில் ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது. பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 9 மாவட்டங்களிலும் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில்...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவேங்கைவாசல் பகுதியிலுள்ள அவரது குவாரி மற்றும் வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்த காலத்தில் மனைவி, மகள்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போது ரூ. 6.41 கோடி சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச...
அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி! அமராவதி ஆறானது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உற்பத்தியாகி கரூரில் பாய்ந்தோடி திருமுக்கூடலூர் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் அமராவதி அணையில் தண்ணீர் அதிகளவு நிரம்பும் போது தான் காட்டாற்று வெள்ளமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கரூரில் தற்போது தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவை பெருகி விட்டதால் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக ஆற்றில் கலந்து தான் ஓடுகிறது. இதன் காரணமாக கரூர் அமராவதிபாலம், பசுபதிபாளையம் ஆற்று பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல் மூக்கினை பிடித்து கொண்டே செல்வதை காண முடிகிறத...
பொன்விழா – அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்!

பொன்விழா – அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பொன்விழா - அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்! மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆண்டு தொடங்குகிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், இருவரும் அதிமுக கட்சி கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  அது மட்டுமல்லாமல்  மக்கள் தொண்டில் மகத்தான் 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் அதிமுக பொன்விழா சிறப்பு மலர் வெள...