‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புற...
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும், அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி....
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!
தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்க...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாவலர் என்று அன்போடு அழைக்கப்படும் இரா.நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 – சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க.அன்பழகன்.
கல...