செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

விளையாட்டு செய்திகள்

வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!

வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்! வில்வித்தை பிரிவில் இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் அதானு தாஸ் முதல் சுற்றில் சீன தைஃபே-யின் யு-செங் டெங்கை 6-4 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் தென்கொரியாவின் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் முடிவில் இருவரும் தலா ஐந்து செட் பாயிண்ட் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் பெற்றார். இதனால் 6-5 என்ற செட் பாயிண்ட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார். 31-ந்தேதி நடைபெறும் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த டி. ஃப்ருகாவாவை எதிர்கொள்கிறார்....
குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்!

குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் (91 கிலோ எடைக்கு மேல் உள்ள வீரர்கள்) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26. முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார். ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்....
டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்! டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3-வது சுற்றில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மா-வை எதிர்கொண்டார். பலம் வாய்ந்த சீன வீரருக்கு சவால் கொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். என்றாலும் முதல் கேம்-ஐ சரத் கமல் 7-11 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அதை 11-8 எனக் கைப்பற்றினார். 3-வது கேம்-ல் கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் 11-13 என அந்த கேம்-ஐ இழக்க நேரிட்டது. 4-வது கேம்-ஐ 4-11 எனவும், 5-வது கேம்-ஐ 4-11 எனவும் இழந்து, இறுதியில் 1-4 எனத் தோல்வியடைந்து ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறினார்....