வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3-வது சுற்றில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மா-வை எதிர்கொண்டார்.
பலம் வாய்ந்த சீன வீரருக்கு சவால் கொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். என்றாலும் முதல் கேம்-ஐ சரத் கமல் 7-11 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அதை 11-8 எனக் கைப்பற்றினார். 3-வது கேம்-ல் கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் 11-13 என அந்த கேம்-ஐ இழக்க நேரிட்டது.
4-வது கேம்-ஐ 4-11 எனவும், 5-வது கேம்-ஐ 4-11 எனவும் இழந்து, இறுதியில் 1-4 எனத் தோல்வியடைந்து ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறினார்.
592 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன