ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Olympics 2021

டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்! டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3-வது சுற்றில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மா-வை எதிர்கொண்டார். பலம் வாய்ந்த சீன வீரருக்கு சவால் கொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். என்றாலும் முதல் கேம்-ஐ சரத் கமல் 7-11 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அதை 11-8 எனக் கைப்பற்றினார். 3-வது கேம்-ல் கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் 11-13 என அந்த கேம்-ஐ இழக்க நேரிட்டது. 4-வது கேம்-ஐ 4-11 எனவும், 5-வது கேம்-ஐ 4-11 எனவும் இழந்து, இறுதியில் 1-4 எனத் தோல்வியடைந்து ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறினார்....
ஒலிம்பிக் ஹாக்கி- இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி!

ஒலிம்பிக் ஹாக்கி- இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
ஒலிம்பிக் ஹாக்கி- இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி! டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்திய பெண்கள் ஹாக்கி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில், 2வது லீக் ஆட்டத்தில் இன்று ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது. இந்திய அணியின் கோல் முயற்சியையும் தொடர்ந்து முறியடித்தது. 2வது பாதியில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து, 2-0 என வெற்றி பெற்றது. கேப்டன் லாரன்ஸ் நைக், ஸ்கார்டர் ஆன் கேத்ரினா ஆகியோர் கோல் அடித்தனர். இந்தியா அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது....