ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: டோக்கியோ ஒலிம்பிக்2021

ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்!

ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர். அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா. இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் ரஷிய வீரரின் உடும்பு பிடியால் புள்ளிகளை இழந்த ரவிக்குமா...
ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா! டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது. ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 ம...
ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆண்கள் ஹாக்கி - இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்! டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் கால் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் 2-2 என சமனிலை வகித்தது. மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. நான்காவது கால் பாதியில் பெனால்டி கார்னர் மூலம் பெல்ஜியம் அணி 2 கோல்கள் அடித்தது. இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
டோக்கியோ ஒலிம்பிக் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றோடு ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் சரத் கமல்! டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3-வது சுற்றில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மா-வை எதிர்கொண்டார். பலம் வாய்ந்த சீன வீரருக்கு சவால் கொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். என்றாலும் முதல் கேம்-ஐ சரத் கமல் 7-11 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அதை 11-8 எனக் கைப்பற்றினார். 3-வது கேம்-ல் கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் 11-13 என அந்த கேம்-ஐ இழக்க நேரிட்டது. 4-வது கேம்-ஐ 4-11 எனவும், 5-வது கேம்-ஐ 4-11 எனவும் இழந்து, இறுதியில் 1-4 எனத் தோல்வியடைந்து ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறினார்....
ஒலிம்பிக் ஹாக்கி- இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி!

ஒலிம்பிக் ஹாக்கி- இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
ஒலிம்பிக் ஹாக்கி- இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி! டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்திய பெண்கள் ஹாக்கி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில், 2வது லீக் ஆட்டத்தில் இன்று ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது. இந்திய அணியின் கோல் முயற்சியையும் தொடர்ந்து முறியடித்தது. 2வது பாதியில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து, 2-0 என வெற்றி பெற்றது. கேப்டன் லாரன்ஸ் நைக், ஸ்கார்டர் ஆன் கேத்ரினா ஆகியோர் கோல் அடித்தனர். இந்தியா அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. ...