ஐபிஎல் 2023 – 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சூப்பர் கிங்ஸ்: டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)
மும்பை இந்தியன்ஸ்:
கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ் பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால்...









