வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

விளையாட்டு செய்திகள்

பெங்களூரு அணியை பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக வழிநடத்துவார்- விராட் கோலி!

பெங்களூரு அணியை பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக வழிநடத்துவார்- விராட் கோலி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ஐ.பி.எல். ஏலத்தில் அனுபவ வீரர் பிளிஸ்சிஸ்சை எடுப்பது என்ற திட்டத்தில் தெளிவாக இருந்தோம். வீரர்கள் ஓய்வறையில் நாங்கள் மிகவும் மரியாதை அளிக்கும் ஒரு தலைவர் தேவை. அதாவது கட்டளை போடும் வீரர் கேப்டனாக வேண்டுமே தவிர, கோரிக்கைகள் வைக்கும் தலைவர் அல்ல. அவர் தென்ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ளார். நிறைய சாதித்துள்ளார். அவர் பெங்களூரு அணியை வழிநடத்துவதில் ம...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – இந்தியா முன்னேற்றம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – இந்தியா முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதன்படி 77 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. 66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி  3-வது  இடத்திலும் உள்ளது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலம் இந்த பட்டியலில் 58 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 50 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது. 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து  அணி 6-வது  இடத்தில் உள்ளது....
15வது ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு!

15வது ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும். லீக் ஆட்டங்க...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே காலமானார்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே காலமானார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்....
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை (24-ந் தேதி) நடக்கிறது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதே திறமையை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது....
திடீரென ட்ரெண்டாகும் #Boycott_ChennaiSuperKings ஹேஷ்டேக் காரணம் என்ன தெரியுமா?

திடீரென ட்ரெண்டாகும் #Boycott_ChennaiSuperKings ஹேஷ்டேக் காரணம் என்ன தெரியுமா?

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது. தல தோனியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் சென்னை ரசிகர்கள். மகுடம் சூடாத மன்னனாக தான் சென்னை ரசிகர்கள் தோனியை கருதுகின்றனர். இந்த ஐபிஎல் ஆக்‌ஷன் சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் வரவழைத்துள்ளது. 2018-ல் கம்பேக் கொடுத்த சென்னை அணியை அங்கிள்ஸ் ஆர்மி என மற்ற அணி ரசிகர்கள் வறுத்தெடுத்தபோதும் ‘OLD IS GOLD’ என சப்போர்ட் செய்த சென்னை ரசிகர்களால் இந்த ஆக்‌ஷனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டூப்பிள்சிஸ் எடுக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த சிஎஸ்கே நிர்வாகம் அடுத்து சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருந்த ரெய்னாவை ஏலத்தில் கண்டுக்கொள்ளாததும் அவரை எந்த அணியும் வாங்காததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில் இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனாவை ரூ.7...
ஐ.பி.எல்.2022 ஏலம்: இன்று 2-வது நாள்!

ஐ.பி.எல்.2022 ஏலம்: இன்று 2-வது நாள்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
    ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனார்கள். இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 13 பேரை எடுத்துள்ளது.  குஜராத் டைட்டன்ஸ் 18.85 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.65 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 3 வெளிநாட்டு வீரர்களுடன் 9 பேரை எடுத்துள்ளது.  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6.9 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு...
10 கோடிக்கு ஏலம் ஐ.பி.எல். வரலாற்றை தகர்த்தெறிந்த அவேஷ் கான்!

10 கோடிக்கு ஏலம் ஐ.பி.எல். வரலாற்றை தகர்த்தெறிந்த அவேஷ் கான்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் அவேஷ் கான். ரபடா, நோர்ஜோ ஆகியோருடன் இணைந்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீச்சு முன்னணி பேட்ஸ்களை திணறடித்தார். இதன்மூலம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரை எடுக்க பல அணிகள் போட்டியிட்டன. அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்தது. லக்னோ அணி இவரை எடுக்க கடும் போட்டியிட்டது. இறுதியில் 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. அவேஷ் கான் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர். இதன்மூலம் சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்....
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் ஏலத்தில் விலை போகாத சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித்!

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் ஏலத்தில் விலை போகாத சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.   10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை அவர்களின் அடிப்பட...