வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

திடீரென ட்ரெண்டாகும் #Boycott_ChennaiSuperKings ஹேஷ்டேக் காரணம் என்ன தெரியுமா?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது.

தல தோனியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் சென்னை ரசிகர்கள்.

மகுடம் சூடாத மன்னனாக தான் சென்னை ரசிகர்கள் தோனியை கருதுகின்றனர்.

இந்த ஐபிஎல் ஆக்‌ஷன் சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் வரவழைத்துள்ளது.

2018-ல் கம்பேக் கொடுத்த சென்னை அணியை அங்கிள்ஸ் ஆர்மி என மற்ற அணி ரசிகர்கள் வறுத்தெடுத்தபோதும் ‘OLD IS GOLD’ என சப்போர்ட் செய்த சென்னை ரசிகர்களால் இந்த ஆக்‌ஷனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டூப்பிள்சிஸ் எடுக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த சிஎஸ்கே நிர்வாகம் அடுத்து சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருந்த ரெய்னாவை ஏலத்தில் கண்டுக்கொள்ளாததும்

அவரை எந்த அணியும் வாங்காததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேவேளையில் இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது தமிழக ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒட்டுமொத்த விளைவாக #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி தங்களது எதிர்ப்பை சென்னை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் ஆக்‌ஷன் தொடங்கியதும் சிஎஸ்கே, yellow army என தெறிக்கவிடும் சிஎஸ்கே ரசிகர்கள் இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸை புறக்கணிக்கிறோம் என பதிவிட்டு வருவது கவனிக்கத்தக்கது.

இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதற்கு இரண்டு பெயர்கள் முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னா மற்றும் இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனா.

சென்னை ரசிகர்களால் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே கழட்டிவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இனி வாய்ப்பே இல்லை என கைவிட்ட போன பல மேட்ச்களில் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களை வைத்து சிங்கிளாக எடுத்து இன்னிங்ஸை கட்டமைத்து.. பவுண்டரியும்… சிக்ஸருமாக தெறிக்கவிட்டு பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியவர் ரெய்னா..

சிஎஸ்கேவுக்காக பல மிரட்டலான இன்னிங்ஸை ஆடியவர். ரெய்னாவை சென்னை நிர்வாகம் புறக்கணித்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புஜாராவை Showoff-க்காக வைத்திருக்கும் சென்னை ஏன் ரெய்னாவை அடிப்படை விலைக்கு கூட எடுக்கவில்லை என கொந்தளிக்கிறார்கள்.

533 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன