சென்சாரை வெளுக்கும் தரமணி…!
இயக்குனர் ராம் இயக்கத்தில் ,JSK பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் ,யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் 'தரமணி' படத்தின் மற்றொரு புது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்திற்காக தணிக்கை குழு தந்த 'A' சான்றிதழை மையமாக வைத்தே இயக்குனர் ராம் இப்படத்தின் விளம்பர யுக்திகளை கையாண்டுவருகிறார். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சென்சார் செய்யப்பட்ட வசனங்கள் வெளிப்படையாக கேட்கும் படியும்,சென்சார் குழுவால் அனுமதிக்கப்பட்ட வசனங்களை ஊமைப்படுத்தியும் ஒரு புது விதமான,மிகவும் சுவாரஸ்யமான யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குனர் ராம்.
https://www.youtube.com/watch?v=RQF6vqVf5tU
இப்படத்திற்கு தணிக்கை குழு 'A'சான்றிதழ் தந்துள்ளதற்கு , படத்தில் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், கதாநாயகனோ மற்ற ஆண் கதாபாத்திரங்களோ மது அருந்தும் ...









