பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம் இனி வரும் – `வேலைக்காரன்’ இயக்குநர் ராஜா
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22-ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா பேசும் போது,
சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது.
அவருடன் 3-வது படமும் இணைந்து பண...









