அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது ரஜினி பேச்சால் ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்ற ரஜினியின் பேச்சால் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் மீண்டும் குழப்பம்..!
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவரும் ரஜினி அரசியல் அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவரோ, தன் நடிப்பில் உருவாகும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாக சிறிது நேரம் ரசிகர்களிடையே உரையாற்றுகிறார். அரசியல், பொதுவாழ்க்கை குறித்தே அவரது பேச்சு அமைந்திருந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று அவரது பேச்சு தனது திரையுலக வாழ்க்கையை பற்றியே அமைந்திருந்தது.
“என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973இல் முதல் முறையாக சென்னை வந்தேன். 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். சென...









