மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது.
ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி 2.0 திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.
...









