தமிழக அரசின் 10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது.
"என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம். நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள்...









