சூப்பர் மார்க்கெட்டில் மிரட்ட வரும் திகில் படம் பேய் பசி..!
இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் # பேய் பசி'.
ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
'பேய் பசி' குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , '' 'Non Working Hours' நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில் நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , 'பேய் பசி' அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது.
இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மு...









