சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர். 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது....
16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு!

16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு!

CINI NEWS, HOME SLIDER
  16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு! நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபிட் இந்தியா’ (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமான ஃபிட் இந்தியாவை மக்கள் இயக்கமாக மாற்றுவதே பிரதமரின் நோக்கமாகும். இதன் மூலம் அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இந்த இயக்...
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்!

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்! இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் பராகான் கலந்து கொண்டார். அவரோடு படப்பிடிப்பில் இன்னொரு நடுவராக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார். இந்த நிலையில் பராகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 2 தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பராகான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இரண்டு தடவை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றினேன். ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்...
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - கடுப்பான சித்தார்த்! திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த், சமூக வலைத்தள பக்கத்தில் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார். சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என தெரிவித்து வருகின்றனர். அதாவது பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 40 வயதே ஆகும் இவர் நேற்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்த...
ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்!

ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்! ஜெர்மனி நாட்டில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி, ரூ.70 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘ஆன்லைன்’ வழியாக புகார் அனுப்பி இருந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீலா, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகியோர் மீது கடந்த மாதம் 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆர்யா போன்று பேசி அந்த பெண்ணிடம் மோசடி செய்ததாக முகமது அர்மான், ஹூசைனி ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் ஜாமீன்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு ...
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு! கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மோடி அரசு, பொருளாதாரத்தை மிக மோசமாக கையாளுகிறது. அதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய தார்மிக கடமை, காங்கிரசுக்கு இருக்கிறது. 70 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட சொத்துகள், மோடிஜியின் சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார்மயமாக்கத்துக்கு காங்கிரஸ் எதிரி அல்ல. ஆனால், காங்கிரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு ‘லாஜிக்’ இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களை காங்கிரஸ் அரசு தனியார்மயம் ஆக்கியது இல...
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு! அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது. சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட ச...
பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்!

பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்றுள்ளார். வெள்ளி வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர். பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார். நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது....
சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்!

சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்! ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில், நடிகர் சந்தானம், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சந்தானம், இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் என...
‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்! திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்திற்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்து சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்...