சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி! ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின. இதனை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயன் இல்லை. கொரோனா காரணமாக தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும் எடுத்து திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஓ.டி.டி.யில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ஏற்கனவே திருட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது நயன்தாரா பார்வையற்றவராக நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக...
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா… லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்!

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா… லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா... லைக்குகளை அள்ளி குவித்த ரசிகர்கள்! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் நடித்து இருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வரும் கங்கனா, தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவு செய்திருக்கிறார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு 10 லட்சத்திற்கு மேலான லைக்குகளை ரசிகர்கள் அள்ளி குவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
சவால் விட்ட மீரா மிதுன்…. அதிரடியாக கைது செய்த போலீசார்!

சவால் விட்ட மீரா மிதுன்…. அதிரடியாக கைது செய்த போலீசார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சவால் விட்ட மீரா மிதுன்.... அதிரடியாக கைது செய்த போலீசார்! நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், என்னை கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும் என்று மீரா மிதுன் சவால் விட்டு இருந்தார். இந்நிலையில், மீராமிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் மீராமிதுனை கைது செய்துள்ளனர். போலீசார் விரைவில் மீராமிதுனை சென்னைக்கு அழைத்து வர இருக்கிறார்கள்....
கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி!

கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி! அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூகி'. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது....
சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு… வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு… வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்! தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:- * தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. * தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யப்படும் * வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் * நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழம் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75% ஆக உயர்த்தப்படும் * தமிழகத்தி...
சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து, கார்த்திக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?!

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ - ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?! நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. ஒத்த செருப்பு படத்தை, இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும் பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் நடிக்க அபிஷேக் பச்சன் இந்த படத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இப்படத்தை பார்த்திபன் இயக்கு...
வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்!

வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்! பொதுவாக எலுமிச்சை பழம் சிறிய உருண்டை வடிவில் தான் வளரும். ஆனால் கர்நாடகத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு 2 கிலோ எடை அளவில் எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. இந்த அரிய எலுமிச்சை பழம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சரகூரு அருகே பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சனோஜ் என்பவரின் வீட்டில் காய்த்துள்ளது. இவர் அந்தப் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வருகிறார். அதில் தான் ராட்சத எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. ஆனால் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது. மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதை பார்த்து சனோஜ் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். அத்துடன் இதுபற்...
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு! தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்க...
மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் பாலா இயக்க உள்ள படத்தை சூர்யா தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிக...