2024-ம் ஆண்டு ஒரே தேர்தலா? மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியாது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் கே.புதூர், மூன்று மாவடி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காணொலியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண், கண்ணகி நீதி கேட்டு முழங்கிய மண், கருணாநிதி நீதி கேட்ட மண்,
தி.மு.க இளைஞர் அணிக்கு அடிக்கல் நாட்டிய மண் மதுரை. தி.மு.க வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் தி.மு.கவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை.
தென் தமிழகத்திற்கு தலைநகரம் போல இருக்கிறது மதுரை. மதுரையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன...









