சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

நடிகர் தனுஷுக்கு குவியும் தெலுங்கு பட வாய்ப்புகள்!

நடிகர் தனுஷுக்கு குவியும் தெலுங்கு பட வாய்ப்புகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் தனுஷுக்கு குவியும் தெலுங்கு பட வாய்ப்புகள்! தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வரும் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்திலும் நடிக்கிறார். இது தனுஷின் 2-வது தெலுங்கு படமாகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷிடம் மேலும் ஒரு தெலுங்கு இயக்குனர் கதை சொல்லி உள்ளாராம். தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மகா சமுத்திரம் படங்களை இயக்கிய மகேஷ் பூபதி சொன்ன கதை தனுஷுக்கு பிடித்துவிட்டதாம். இதனால் அந்த கதையில் நடிப்பதற்கும் அவர் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எ...
‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்! நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு!

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு! தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பலியான நிலையில், கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி  போடும் சிறப்பு முகாம் இன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி  போடப்பட்டது. காலை 7 மணியில் இருந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடு...
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்! இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை அதிதி, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், அதிதியை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகை அதிதி, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்க...
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை! எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர்.  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த  ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. இந்த நிலையில்,  ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் (20). ஏற்கனவே 2 முறை  நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று 3-வது ...
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்! இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது....
வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்!

வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்! டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்த பருவமழை சீசனில் சாதனை அளவாக இதுவரை 1005.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பருவமழை காலத்தில் பெய்த மழை அளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து டெல்லியில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலைய வளாகம் வெள்ளக்காடாக மாறியது. விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மோசமான வானிலை காரணமாக  விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது....
விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்!

விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விளம்பரம் தேட வில்லை.... கனகா காட்டம்! கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான கனகா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோரின் படங்களில் நடித்து இருக்கிறார். 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் நடிக்க ஆசை உள்ளது என்றும், இதற்காக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கற்கப்போகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வீடியோவை பார்த்த சிலர் மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று கனகாவை விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்து கனகா வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், “நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. ...
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார். நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், எனவே இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது....
மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… பட்டாசு வெடிக்க தயாராகும் ரசிகர்கள்!

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… பட்டாசு வெடிக்க தயாராகும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... பட்டாசு வெடிக்க தயாராகும் ரசிகர்கள்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....