ராஜீவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘சர்வம் தாளமயம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
'அடங்காதே', '4ஜி', 'ஐங்கரன்', 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'நாச்சியார்' ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார்.
9 பாடல்கள் உள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் - ஜி.வி.பிரகாஷ் இருவருமே உறவினர்கள் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ...









