சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

ஸ்ரீகாந்த் – நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் “சம்பவம்”

ஸ்ரீகாந்த் – நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் “சம்பவம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்* மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர். நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை ச...
நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை.. பெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..? கடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தோம்.. ஆனால் எங்களுக்கு பிறகு வந்த. நேற்றைய தேதியில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கியுள்ளார்கள்.. ஏனென்றால் தியேட்டர் அதிபர்களில் சிலரே சம்பந்தப்பட்ட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்.. அதனாலேயே அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல வெளி மாநில படங்களுக்கும் கூட அதிக மு...
சீன அதிபர் – பிரதமர் மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – புதுத்தகவல்…!*

சீன அதிபர் – பிரதமர் மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – புதுத்தகவல்…!*

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *சீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – வியக்க வைக்கும் தகவல்…!* சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பம் சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டபடி இருவரும் பேசி வருகின்றனர். மோடி – ஜின்பிங் சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்துள்ளதால் இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடுவார்கள். இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருக்கின்றனர். அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர்.மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். மது சுதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் (அரசியல்) ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் ...
மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்   நல்ல படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் ; லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் விரக்தி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார். ஆனால் இந்த படம் இன்று...
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர...
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி  மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள கடப்பாக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஈச்சம்பாக்கம் பகுதியில் இருந்து புதுப்பட்டினம் வரையிலும் உள்ள கிராம மக்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் அவர் கட்டாயம் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கடல...
சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி

சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி பாண்டியன் மாஸ்டர் என்றால் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை. மாடக்குளம் ரவி ஆசான் என்பவர் தான் பாண்டியன் மாஸ்டரின் ஆசான். மாடக்குளம் ரவி என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் தந்தை மற்றும் இவரும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அவரிடமே சிஷ்யனாக இருந்த பாண்டியன் மாஸ்டர் சினிமாவில் சூர்யா, கார்த்தி, நடிகை சாய் தன்ஷிகா, ஆர்யா, விஷால், அருண் விஜய், சாந்தனு உட்பட பலருக்கும் இவர் சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்றும் பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். கமல் நடித்த 'தேவர்மகன்' படத்தில் 'சாந்து பொட்டு' என்று தொடங்கும் பாடலுக்கு முன்பு நடைபெறும் சண்டை பயிற்சியில் உடன் இருந்தார். பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் ட்ரெயினிங் அக...
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சமீபத்தில் 'மான்ஸ்டர்' மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார் இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இ...
நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனர...
பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், 'கின்னஸ்' புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் 'பிட்னஸ் ஸ்டார்' மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370' கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370'. உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து 'காட்டுபுறா' திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் 'வாசனை படம்' படைத்த பெருமைக்குரியவர். இன்று பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் 370. இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கு...