“அங்கம்மாள்” சினிமாவான எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதை!
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்க அதனுடன் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃப்ரோ மூவி ஸ்டேஷன் சார்பில் கார்த்திகேயன் எஸ். ஃப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் தயாரித்துள்ள இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கீதா கைலாசம், இந்த படத்தில் அம்மாவாக நடித்திருந்தாலும், கதையின் நாயகியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகை...









