சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.   அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங...
பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பேரறிவாளனின் சிறைவிடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரது பரோல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்,பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத சிறைவிடுப்பு வழங்கி தமிழக அரசு ஆணை...
பிறந்தநாளில் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துக் கொள்ளும் ஸ்ருதி ஹாசன்!

பிறந்தநாளில் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துக் கொள்ளும் ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிறந்தநாளில் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துக் கொள்ளும் ஸ்ருதி ஹாசன்! தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால் ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர். அனைத்து ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார். மேலும் இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் ப...
திருமணம் எப்போது? பதில் அளித்த பாவ்னி!

திருமணம் எப்போது? பதில் அளித்த பாவ்னி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணம் எப்போது? பதில் அளித்த பாவ்னி! தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் 'ரெட்டை வால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபினய் உடன் ஏற்பட்ட உறவு சர்ச்சைக்குள்ளானது. அதே போல் அமீர் காதலிப்பதாக கூறிய போதிலும் அந்த காதலை ஏற்று கொள்ளாமல் அவரை பாவ்னி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய பாவ்னி, தனது திருமணம் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘வாழ...
5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை!

5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை! பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 54 வயது ஆகிறது. இவர் பே வாட்ச் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010-ல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா 1995-ல் காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். 2006-ல் கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். 2007-ல் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை மணந்த திருமணமும் நிலைக்கவில்லை. அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார். ஆனால் 2014-ல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை 2-வது தடவையாக விவாகரத்து செய்தார். 2020-ல் ஹாலிவுட் தயாரிப்பாளரும் சிகை அலங்கார நிபுணருமான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து பெற்றார். பின்னர் தனத...
ஜெண்டில்மேன் 2 இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு பரிசாம்!

ஜெண்டில்மேன் 2 இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு பரிசாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *இசையமைப்பாளரை கண்டுபிடித்தால் தங்ககாசு, மீண்டும் அசத்தும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் !* தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ' *ஜென்டில்மேன் 2* ' படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே அத...
பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு!

பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு! பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைளை ஏற்று கட்சியில் இணைந்துள்ளார். நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே கொள்கைகள் இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) சந்தர்ப்பவாத கட்சியாகும். அந்த கட்சிக்கு என்று கொள்கை எதுவும் கிடையாது. பா.ஜனதாவினர் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை கேட்டு நடக்க கூடியவர்கள். அந்த கட்சிக்கு என்று தனிக்கொள்கை எதுவும் இல்லை. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவின் கடன் ரூ.53 லட்சம் கோடியாக இருந்தது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.135 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பா.ஜனதா ஆட்சியில் நடந்த பெரிய சாதனை...
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி!

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி! மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்த குடியிருப்பின் 18வது தளத்தில் தீப்பிடித்துளள்து. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது....
கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்! மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு ந...
2 கரடி, 2 சிறுத்தை ஊருக்குள் புகுந்து உணவு தேடியதால் மக்கள் அச்சம்.!

2 கரடி, 2 சிறுத்தை ஊருக்குள் புகுந்து உணவு தேடியதால் மக்கள் அச்சம்.!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கரிமறா அட்டி கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் ஆகிய பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றிலும் தேயிலை தோட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்து, இரவு வேளைகளில் குடியிருப்புகளில் உணவுகளை தேடி அலைந்து வருகிறது. மேலும், கடந்த சில மாதமாக சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டமும் காணப்பட்டுள்ளது இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் சிறுத்தை வீட்டில் இருக்கும் நாய், வீட்டு விலங்கு போன்றவற்றை அடித்து கொன்று சாப்பிடுகிறது. மக்கள் சுதாரித்து எழுந்து விரட்ட தொடங்கினால், வேட்டையாட்டிய உணவை அப்படியே விட்டுவிட்டு தப்பி செல்கிறது. இதனைப்போல கரடிகளும் வீடுகள் மற்றும் கோவிலில் உள்ள எண்ணெய், ...