தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!
தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை புதிய திமுக அரசு வழங்கியுள்ளது.
அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஐஜி அந்தஸ்த்தில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழக காவல்துறையிலேயே முதன்முறையாகும்.
குரூப்-1 அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். தூத்துக்கு...
சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!
சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு விமான நிலையம் செல்லும் நிலையில் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார்.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா மற்றும் அவரது மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தடுப்புக் காவலில் இருந்தபோதும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அங்குள்ள மனித உரிமைகள் கு...
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் - உரிமையாளர் மீது வழக்கு!
குஜராத் மாநிலம் கிருஷ்ணா நகர் மாவட்டத்தில் உள்ள திரண்பார்க் பகுதியை சேர்ந்தவர் சிரக் படேல், ஊர்விஸ் படேல்.
அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் அந்த செல்ல நாய்குட்டிக்கு பிறந்தநாளாம். இதையொட்டி கிருஷ்ணா நகரில் மிகவும் பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உறவினர்கள் அனைவருக்கும் அவர்கள் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். நுற்றுக்கணக்கானவர்கள் அந்த செல்ல நாய்க்குட்டி பிறந்த நாளுக்கு திரண்டு வந்தனர்.
நாய் குட்டியை கையில் வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் கேக் வெட்டினார்கள். முதல் துண்டு கேக் அந்த நாய்குட்டிக்கு ஊட்டப்பட்டது. அபி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நாய்க்குட்டிக்கு பட்டுத்துணியில் உட...
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்....
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என புஷ...
சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!
சென்னையில் கொரோனா பரவல் கடந்த அலையைவிட தற்போது வேகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் பலருக்கு ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் அதாவது 6 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.
3,747 ஆக்சிஜன் படுக்கைகளில், 18 சதவீதம் (699 படுக்கைகள்) மட்டுமே நிரம்பி உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை.
அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறுகையில், 231 நோயாளிகள் எஸ் ஜீன் வீ...
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர்.
விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன்ப...
பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற கணவன் மனைவியை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி உள்ளார்,
உடன் இன்ஜினியர் அங்கித் சிங் என நான்கு பேருடன் பெங்களுரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது
ஹெலிகாப்டர், ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்த போது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணியளவில் திடீர் என வயல்வெளியில் தரை இறங்கியது
முன்னதாக, கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து உள்ளனர்
ஹெலிகாப்டர் தரை இறங்கியதை அறிந்த கடம்பூர் மலைப்பகுதியை பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண திரண்டனர், மேலும் சிறுவர்கள், இளைஞர்கள் ஹெலிகாப்டரை முன்பு நின்று ஆச்சரியத்தில் போட்டோ மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.
பனிமூட்டம் காரணமாக கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர...