சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்! ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப்ப...
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!

துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
துப்பாக்கி சுடுதலில் அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அஜித். தேசிய அளவிலான போட்டியிலும் அஜித் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது....
லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாலிவுட் நடிகை! தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவ்துலா. அதன்படி சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடை...
மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்! கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட...
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், சியான் 60 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி ‘சியான் 60’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை! முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்....
பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்ட ‘கொற்றவை’ கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை- சி.வி.குமார்

பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்ட ‘கொற்றவை’ கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை- சி.வி.குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி வி  குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.   ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.   யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு கட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார் . இந்தப் பயணத்தின் போது பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வடிவு ஏன் இந்த புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார், அவருக்கும் புதையலுக்கும் என்ன தொடர்பு என்பதே கொற்றவை படத்தின் சாராம்சம்.   இந்த திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று சி வி குமார் கூறுகிறார்.   படத்தை பற...
விவசாயிகளுக்கு என்னற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை

விவசாயிகளுக்கு என்னற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  விவசாயிகளுக்கு என்னற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார். இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: “தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது. அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.   பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.   விழாவில், டாக்டர் ஏ.பி...
நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி! ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின. இதனை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயன் இல்லை. கொரோனா காரணமாக தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும் எடுத்து திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஓ.டி.டி.யில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ஏற்கனவே திருட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது நயன்தாரா பார்வையற்றவராக நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக...