ஈரோடு திமுக மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஸ்டாலின் நவீன பொம்மை!
திமுக மண்டல மாநாடு ஈரோடில் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் உருவம் கொண்ட பொம்மை மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஈரோடுமாநகர் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஈரோட்டில் நாளையும் நாளை மறுநாளும் திமுக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி, கரூர்உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்து கொள்கின்றனர். இந்த மண்டல் மாநாட்டு பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இம்மாநாட்டுக்காக, கடந்த 2மாதங்களாகவே ஈரோடு மாநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டும், சுவர் விளம்பரங்கள் செய்தும் வருகின்றனர். மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில்தெருமுனைப் பிரச்சாரங்களும் திமுகவினர் நடத்தினர்.
குறிப்பாக மு.க.ஸ்டாலின் போன்று தோற்றமுடைய பொம்மை ஒன்று சைக்கிளில் சென்றபடியே மாநாட்டிற்கு அழைப்ப...









