ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. கேரள மாநிலத்தில் 1 உறுப்பினர் இறந்ததால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் 59 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மாநில வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:
ஆந்திரம் – 3, பீகார் – 6, சத்திஷ்கர் – 1, குஜராத் – 4, அரியானா – 1, இமாசலப்பிரதேசம் – 1, கர்நாடகம் – 4, மத்தியப்பிரதேசம் – 5, மகாராஷ்டிரம் – 6, தெலங்கானா – 3, உத்தரபிரதேசம் – 10, உத்தரகாண்ட்- 1, மேற்குவங்கம்- 5, ஒடிசா – 3, ராஜஸ்தான் – 3, ஜார்கண்ட் – 2, கேரளம் – 1.
மொத்தம் தேர்தல் நடைபெற வேண்டிய 59 இடங்களில் 33 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர் தேர்வு நடந்துள்ளது. ஆக, மீதமுள்ள 26 இடங்களுக்கு மட்டும்தான் தேர்தல் நடைபெறுகிறது. போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட 33 பேரில் பாஜகவினர் – 19 பேர், காங்கிரஸ் – 5, பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 5 பேர்.
மீதமுள்ள 26 இடங்களுக்கான தேர்தல் 6 மாநிலங்களில் நடைபெறுகிறது. அதன்படி உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கும் மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கும், கர்நாடகத்தில் 4 இடங்களுக்கும் தெலங்கனாவில் 3 இடங்களுக்கும், ஜார்கண்டில் 2 இடங்களுக்கும், சத்திஷ்கரில் 1 இடத்துக்கும் கேரளத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 6 இடங்களும் பீகாரில் இருந்து 6 இடங்களும் பாஜக அணிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஹரியான ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் பாஜகவுக்கு கிடைக்கும்.
தற்பொழுது 58 இடங்களைப் பெற்றுள்ள பாஜக 12 இடங்களை கூடுதலாகப் பெறும் அதன்பலம் 70 ஆக உயருமா என்பது. இன்று மாலை 5 மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றே இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் போது தெரியும்.
