செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கனமழையால் தேங்கிய தண்ணீர் – படகு ஓட்டி அசத்திய மன்சூரலிகான்!

கனமழையால் தேங்கிய தண்ணீர் – படகு ஓட்டி அசத்திய மன்சூரலிகான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கனமழையால் தேங்கிய தண்ணீர் - படகு ஓட்டி அசத்திய மன்சூரலிகான்! தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூரலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூரலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான், மழையினால் தனது வீட்டிற்கு முன் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் படகு ஓட்டி இருக்கிறார். மேலும், மழை நிலைமையை பாடி, மகிழ்ந்து வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார் மன்சூரலிகான்....
விட்ராதீங்க முதல்வரே… பேரரசு அறிக்கை!

விட்ராதீங்க முதல்வரே… பேரரசு அறிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விட்ராதீங்க முதல்வரே... பேரரசு அறிக்கை! பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாட்டில் கல்லூரிகளில...
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா!

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா! நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன் அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கி...
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்....
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை!

பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் சீசன் 5 - கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை! தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங...
பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க – ராதாரவி!

பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க – ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க - ராதாரவி! திரைப்பட விமர்சகர் மாறன் இயக்கியிருக்கும் படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ராதா ரவி பேசும்போது, இந்தப்படத்தில் நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா என்று முதலில் யோசித்தேன். படத்தில் சிஎம்-ஆ நடித்திருக்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனால் இந்த நேரத்தில் இந்தப்படம் வெளியாகும் போது யார் என்ன விதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியவில்லை. இந்தப்படம் வெளியானதும் இதற்கு விவாத மேடை நடத்துகிறதுக்குத் தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்தில் கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க...
அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்!

அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்! நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அம்மன் வேடம் கச்சிதமாக உள்ளது. புதிய படத்தில் அம்மனாக நட...
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு!

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு! அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட வி...
அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு! அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உரையாற்றுகிறார்கள். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன....
பொதுமக்கள் கவனமாக இருங்கள்… 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

பொதுமக்கள் கவனமாக இருங்கள்… 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொதுமக்கள் கவனமாக இருங்கள்... 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விட்டு விட்டு கனமழை  பெய்து வருவதால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலுர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய ஏற்படலாம் என மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது....