நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்
தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது. உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை, இது புரதத்துடன் இணைந்து ‘கொழுப்புப் புரதமாக‘ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகரித்தால் ஆபத்து காத்திருக்கும். கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும். இவற்றில், எல்.டி.எல்.லும், வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலில் இருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு‘ என்கிறோம்.
அதே வேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத...









