புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

இசைஞானி  இசையில்  ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” !

இசைஞானி இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
  இசைஞானி இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் "நினைவெல்லாம் நீயடா" ! தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் கன்னடம் மலையாளம் மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மற்றும் மனோபாலா காளி வெங்கட் மயில்சாமி செல்முருகன் மதுமிதா ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்...
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி   உத்தரபிரதேச மக்கள் தொகை வரைவு மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலைகள் இல்லை , அரசு மானியம் கிடைக்காது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடியாது எனகூறப்பட்டு உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்...
பிரதமர் மோடியின் மந்திரிசபையில் 42 சதவீதம் பேர் கிரிமினல்,  90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் – ஏடிஆர் ஆய்வு அறிக்கை

பிரதமர் மோடியின் மந்திரிசபையில் 42 சதவீதம் பேர் கிரிமினல், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் – ஏடிஆர் ஆய்வு அறிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிரதமர் மோடியின் மந்திரிசபையில் 42 சதவீதம் பேர் கிரிமினல், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் - ஏடிஆர் ஆய்வு அறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. கூட்டணி மந்திரிசபையில் அங்கம் வகித்த சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகின. அதைத்தொடர்ந்து அவற்றின் மந்திரிகள் அரவிந்த் சவந்த், ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகலாலும், மத்திய மந்திரிகளாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவாலும், காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால் மூத்த மத்திய மந்திரிகள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை கவனித்து வந்தனர் இந்த நிலையில் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அங்கு பா.ஜ.க. செல்வாக...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முத...
அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் !

அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாகவும், இப்படத்தை ரஜினியின் மகள்கள்...
தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்!

தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்! தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் புதிய தலைப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவார் எனவும், அதோடு தலைப்பு மாற்றத்துக்கான காரணத்தையும் அவர் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது....
புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி! தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (Kurian Kodiyattu) உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது! தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி,   ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே  அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று  தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி...