செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவரது, இமேஜை குக் வித் கோமாளி நிகழ்ச்சி முற்றிலும் மாற்றியது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷகிலா, தற்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” என...
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!

நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா! நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது அமைதிக்கான காரணம் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்...
இனி ஓ.டி.டி.யே வேண்டாம்… சல்மான் கான் அதிரடி முடிவு!

இனி ஓ.டி.டி.யே வேண்டாம்… சல்மான் கான் அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இனி ஓ.டி.டி.யே வேண்டாம்... சல்மான் கான் அதிரடி முடிவு! பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் ரம்ஜான் தினத்தன்று வெளியிடப்பட்டது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். ஆனால், படமோ ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 249 ரூபாய் செலுத்தி படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததால், ராதே படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனிடையே, ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்தவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில் ...
மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது!

மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது! தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் சரவன், அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் 2 படத்திற்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லி பாபுவிடம் கூறியுள்ளதாகவும், அதற்கான கதையில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம்  'மரகத நாணயம் 2' விரைவில் உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எத...
நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்!

நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், இந்த சமயத்தில் இத்தகைய புகைப்படங்கள் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்....
பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி!

பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி! இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்க வந்த புதிதிலிருந்தே, தனது பெயரை ஜனனி ஐயர் என்று தான் குறிப்பிட்டு வந்தார். சமூக வலைதளங்களிலும் அந்தப்பெயரையே பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தனது பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி உள்ளார் நடிகை ஜனனி. அவரின் இந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை நடிகை ஜனனி விளக்...
முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு!

முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. இதன் பின்னர் ஏப்ரல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடந்த 12-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருந்தது. இதன் பிறகு நோயின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த தினசரி பாதிப்பு கடந்த 20-ந்தேதி அன்று 35 ஆயிரத்தை கடந்தது. அன்று 35,579 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. அதற்கு மறுநாள் (21-ந்தேதி) 36,194 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 26-ந்தேதியில் இருந்து நோயின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் முழ...
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்!

தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் - நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்! தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்த...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்! சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும். இந்நிலையில், அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெங்கட் பிரபுவின் 10-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பிர...
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற 34 சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.31 கோடி ஆகும். இது 5 ஆயிரத்து 704 சதுர அடியில் இரண்டடுக்கு வகையை சேர்ந்த வீடு ஆகும். இதில் 6 வாகனங்களை நிறுத்த நவீன முறையில் வசதி உள்ளது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.62 லட்சத்தை அமிதாப் பச்சன் செலுத்தி உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 பங்களா வீடுகள் இருக்கும் நிலையில், தற்போது 5-வதாக புதிய வீடு வாங்கி உள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் ஒரு வீடு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....