செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ...
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு! ‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடிகர் வைபவ்வு...
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார். இதைத்யொட்டி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச...
ஏ.எச்.காஷிஃபின் “அல்லா” பாடலுக்கு வரவேற்பு

ஏ.எச்.காஷிஃபின் “அல்லா” பாடலுக்கு வரவேற்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
  ஏ.எச்.காஷிஃபின் அல்லா பாடலுக்கு வரவேற்பு ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பதினெட்டாம்படி உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.எச்.காஷிப். காஷிஃப்பின் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஃபாத்திமாவின் மகனான காஷிஃபுக்கு இசைத்திறமை ஓங்கி இருப்பதில் வியப்பில்லை. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல் தனி இசை பாடல்களிலும் காஷிஃப் தன் திறமையால் கொடி கட்டி பறக்கிறார். இவர் இசை உருவாக்கத்தில் காதலர் தினத்துக்காக உருவாக்கி வெளியிட்ட ஆல்பம் லட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அடுத்து ரெண்டகம், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துவரும் காஷிஃப் இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க தன் புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். புனித ரமலான் பண்டிகையொட்டி அல்லா யா அல்லா...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்! இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
டுவிட்டரில் இணைந்தார் இயக்குனர் பாலா… முதல் டுவிட்டே முதல்வரை பற்றிதான்!

டுவிட்டரில் இணைந்தார் இயக்குனர் பாலா… முதல் டுவிட்டே முதல்வரை பற்றிதான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
டுவிட்டரில் இணைந்தார் இயக்குனர் பாலா... முதல் டுவிட்டே முதல்வரை பற்றிதான்! விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. விருதுகளையும் வாரிக்குவித்தன. குறிப்பாக நான் கடவுள் படத்திற்காக பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் இயக்குனர் பாலா டுவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார். அதில் தனது முதல் டுவிட்டாக, சமீபத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார் பாலா. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “மாண்புமிகு முதல்வர்‌ மு.க. ஸ்டாலின் அவர்க...
‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ!

‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை படக்குழு அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு!

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடை பிடிக்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக இன்று பஸ், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்...