செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் - ரசிகர்கள் உற்சாகம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி இப்படம் வருகிற மே 14-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. சுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக ஜகமே தந்திரம் படம் 17 ம...
முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான  தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். • வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும். • ...
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. • தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. • உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி • காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். • அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
‘பருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம் – நடிகர் கார்த்தி இரங்கல்!

‘பருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம் – நடிகர் கார்த்தி இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
‘பருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம் - நடிகர் கார்த்தி இரங்கல்! மீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்திருந்தவர் பஞ்சவர்ணம். அவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே ந...
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!

அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்! நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சூர்யாவின் சூரரை போற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து! சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய க...
தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ!

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ! சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் கடும் கலவரம் வெடித்தது. எதிர்கட்சியை சேர்ந்த பலர் இந்த கலவரத்தில் காயமுற்றனர். மேலும் கட்சி அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டத்தினர் காவல் துறை வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2021 ஜனவரி மாத வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசார் மற்றும் உள்ளூர் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த வகையில் வைரல் வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதிய...
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!

கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!

HOME SLIDER, NEWS, politics, திரைப்படங்கள்
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் அரியணையை அலங்கரிக்கிறார். தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கூடி மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்...
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’  துர்கா ஸ்டாலின், உதயநிதி ஆனந்த கண்ணீர்!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ துர்கா ஸ்டாலின், உதயநிதி ஆனந்த கண்ணீர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் திமுக, புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.  ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டார். யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத...